முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல் குண்டுகள் முழங்க தகனம்..!

DSGeneral-BipinRawat-laid-to-final-rest-with-full-military
DSGeneral BipinRawat laid to final rest with full military

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சூலூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு நேற்றுக் காலை வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை அடுத்து மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் இறந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

டெல்லியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுததினர்.

DSGeneral-BipinRawat-laid-to-final-rest-with-full-military
DSGeneral BipinRawat laid to final rest with full military

இதனைத் தொடர்ந்து கன்டோண்ட்மென்ட் மயானத்தில் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது

Total
0
Shares
Related Posts