தமிழகத்தில் தற்போது வெளுத்து வாங்கி வரும் பரு மழையால் மதுரை, கோவை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்றும் விடாமல் பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிகளில் நடைபெற இருந்த சிறப்பு வகுப்புகளும் இன்று நடைபெறாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இதேபோல் கோவை மற்றும் திண்டுக்கலில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.