புதுக்கோட்டையில் ரவுடி துரை நேற்று என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியப நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறிருப்பதாவது :
நாட்டுத் துப்பாக்கியுடன் புதுக்கோட்டை திருவரங்குளம் தைல மரக் காட்டில் பதுங்கியிருந்த ரவுடி துரையை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர் ஆவேசமாக போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
தன் பெயரைக் கேட்டால் மாவட்டமே நடுங்கும் எனக் கூறி காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்; போலீசார் எச்சரித்தும் கேட்காமல் நாட்டுத்துப்பாக்கியை வைத்து ரவுடி துரை மிரட்டியுள்ளார்.
Also Read : சாட்டை துரைமுருகன் மீதான கைது நடவடிக்கை – இபிஎஸ் கண்டனம்..!!
முதுகில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் ரவுடி துரை வெட்டியதில் உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்திற்கு வலது கையில் பலத்த காயம் எற்பட்டது .
பிறகு அவரை பிடிக்க முயன்றபோது ரவுடி துரை ஆவேசமாக தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி சுட்டு ஆலங்குடி காவல் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
போலீசார் எச்சரித்தும் ரவுடி துரை பட்டாக் கத்தியால் மீண்டும் மீண்டும் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது .
ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் சுட்டத்தில் துரையின் இடது முழங்கால் மற்றும் இடது மார்பில் குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்த ரவுடி துரை உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.