நம் மொழி தமிழ் மொழி என்று தமிழ்மொழி உள்ளத்தில் இருக்கும் பொழுது அதனை யாரும் அழித்துவிட முடியாது” எனஅமைச்சர் துரைமுருகன் (duraimurugan) தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப் பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 6ம் ஆண்டுதொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்தமிழியக்கம் நிறுவன தலைவர் விசுவநாதன்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் மகளிர் உரிமை தொகை அளித்த முதல் வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 நீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் விழாவில் பேசியதாவது…
எனக்கு ஆசானாகஎன்னை உருவாக்கியசிற்பி விஸ்வநாதன். அவர் பெற்ற வளர்ச்சி, அவர் கல்வி துறையில் பெற்ற வெற்றிக்கு நிம்மதியாக வாழலாம். ஆனால் தமிழியக்கம் என்று ஒரு மன்றத்தை உருவாக்கி அதை கொண்டு செல்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது தெரிகிறது.
இது அவர் தமிழ் மீது கொண்டபற்றை காட்டுகிறது. நாம் எல்லோரும் தமிழர்கள் நம் மொழி தமிழ்மொழி என்று தமிழ்மொழிஉள்ளத்தில் இருக்கும்பொழுது யாரும் அதனைஅழித்துவிட முடியாது.
செத்துப்போன மொழிகள் எல்லாம் செம்மொழியாக இருக்கும் போது வாழும் மொழியான என் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டவர் மனோன்மணியம், அதன் பின்னர்பேசியவர் கலைஞர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிகொடுத்தவர் கலைஞர், இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ,பாமக தலைவர் அன்புமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமாகா தலைவர்ஜி.கே. வாசன், அதிமுகமுன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் உள்ளிட்டபல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.