ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
இதன் காரணமாக இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
Also Read : கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!!
இந்த இ-பாஸ் முறை மே 7-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படுவதாக நீதிபதிகள் அறிவித்திருந்தனர் . இந்நினையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி சென்று வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்னும் அதிகரித்து வருவதால் ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.