ஈரான் (iran northwest) எல்லையில், நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் (iran northwest) உள்ள கோய் நகரில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாகவும், மேலும், அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் 5.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானிய செய்தி நிறுவனமான IRNA அளித்துள்ள தகவலின்படி இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்றும் மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
Notable quake, preliminary info: M 5.9 – 7 km SW of Khowy, Iran https://t.co/Rjmgz05sSM
— USGS Earthquakes (@USGS_Quakes) January 28, 2023
மேலும், ஈரானின் அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும், இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 2022ஆம் ஆண்டில் தெற்கு ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கதால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,00 கிலோ மீட்டர் தெற்கே உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் சுமார் 300 பேர் வசிக்கும் கோஷ் கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.