அதிகாலையில் குலுங்கிய அருணாச்சல பிரதேசம் ; அலறியடித்த மக்கள்

Earthquake Hits Arunachal Pradesh
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடாநகரில்  இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடாநகரில் இருந்து வடமேற்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 01.30 மணியளவில் ஏற்பட்டு உள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நில அதிர்வால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும்  வெளியாகவில்லை.

இந்த செய்தியையும் படிக்கவும் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

Total
0
Shares
Related Posts