வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக உலகம் நாடுகளில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளது. மழை, வெள்ளம், புயல், நில அதிர்வு, என பல இயற்கை அழிவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் கர்நாடகாவின் சிக்கபல்லபுரா அருகே 2 முறை அடுத்தடுத்து 2.9 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.