டெல்லிக்கு விரைந்த போலீசார்.. – ராஜேந்திர பாலாஜி சிக்குவாரா?

பணம் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 13ஆவது நாளாக தேடி வருகிறது.

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, பெங்களூரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Total
0
Shares
Related Posts