மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

steps-are-being-taken-to-vaccinate-students-in-schools
steps are being taken to vaccinate student in schools

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவத் தொடங்கி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்றுப் பரவலை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், நிபந்தனைகளுடன் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்தது.

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்வதற்கான முன்பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

steps-are-being-taken-to-vaccinate-students-in-schools
steps are being taken to vaccinate student in schools

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிகத்தில் ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கூறியா அவர் 15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜன.3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.

Total
0
Shares
Related Posts