சுமார் 50 லட்சம் மின் இணைப்புகள் இன்னும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ள நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க (linking) இன்னும் 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது என தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தற்போது மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ள நிலையில், இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்நிலையில், முன்னதாக 2 கோடியே 67 லடசம் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைக்க (linking) டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் இருந்தது. பின்னர், ஜனவரி 31-தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்னும் கிட்டத்தட்ட 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இருந்தால் விரைவில் இணைத்துவிடுமாறு அறிவுத்தப்படுகின்றனர்.