இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமாகியுள்ளார்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Also Read : ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் தயாரானது..!!
இந்நிலையில், பேராயர் எஸ்றா சற்குணம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சற்குணம் மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் வந்தவுடன் இறுதி சடங்கானது நடைபெறும் என்றும் தற்போது சற்குணம் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.