ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் ( EPS WISH ) தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இப்பண்டிகைக்கான 1 மாதம் நோன்பை இஸ்லாமியர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ரமலான் மாத பிறை தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
இறைவனின் கட்டளைப்படி, காலை முதல் மாலை வரை ஒருமாத கால நோன்பிருந்து, வணக்க வழிபாடுகள் போன்ற இறைவணக்கம் வாயிலாகவும், பொய், பொறாமை போன்ற தீய செயல்களை தவிர்த்து, ஏழைகளின் பசித் துன்பத்தை உணர்ந்து, அவர்களின் பசிப் போக்கும் ஈகை எனும் தர்மத்தை அதிகம் செய்து,
Also Read : https://itamiltv.com/1-crore-16-lakh-women-will-respond-to-khushbu/
இறை திருப்தியை பெறும் மாதமாகவும், புனித குர்ஆன் அருளப்பட்ட புண்ணியம் மிகுந்த, கண்ணியமான அருள் நிறைந்த, புனிதமிகு ரமலான் மாதத்தை அடைந்துள்ள, உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு, ( EPS WISH ) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.