UPSC Civil Services -2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ்UPSC Civil Services முதன்மை தேர்வை மே 26-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.!
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு மே 26-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 16-ஆம் தேதி ஒத்திவைக்க யுபிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.