ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்திய இந்த வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கொரோனா தொற்று சற்று குறைவடைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்திய பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளையும் அதிப்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக உத்திர பிரதேஷ். உத்திர காண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.
திருமணங்கள், இறுதிச் சடங்குகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சந்தைகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கபட்டுள்ளதாகவும் ஏயவிக்கபட்டுள்ளது.