TN Election in one phase : நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : முதல்வர் ஸ்டாலினுக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? – பா.ஜ.க அண்ணாமலை கேள்வி!!
மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும்,
புதுச்சேரியில் 1 தொகுதியிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , கேரளாவில் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதியும்,
3-ஆம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக மே 13 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதோடு, 5-ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், 6 மற்றும் 7-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பரப்புரையின் போது கட்சிகள் கையாளவேண்டிய சில கட்டுப்பாடுகளையும் தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
TN Election in one phase : அதனடிப்படையில், தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்த கூடாது;
பரப்புரையின் போது, கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும், பரப்புரையின் போது மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ யாரையும் விமர்சிக்க கூடாது,
பரப்புரையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பத்தகுந்த செய்திகளை போல சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி துவங்கும் எனவும், மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் எனவும்,
வேட்புமனு மீதான மறுபரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.