கோத்தகிரி அருகே அரசு பேருந்தின் மீது மின்கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்து கோத்தகிரியை நோக்கி சென்றுள்ளது அப்போது கோவில்மட்டம் அருகே அரசு பேருந்து செல்லும் போது சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது பேருந்து உரசியதில் ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Also Read : அதிகரிக்கும் குரங்கு அம்மை பரவல் – அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு..!!
இதனை அறிந்த நடத்துனர் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் இணைப்பை துண்டித்து ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கோத்தகிரியில் அரசு பேருந்து மீது மின்சாரம் தாக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.