ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார். இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு.
இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும்(3.12 லட்சம் கோடி) வாங்குவதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் எலன் மஸ்க் சேர்க்கப்பட்டார்; ஆனால் அவர் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது.