உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், விரைவில் இந்தியா வருகை தர உள்ளதாக (elan musk) தகவல் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் ஒருவராக வலம் வருபவர் எலான் மஸ்க் . டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும், ‛எக்ஸ்’ வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க், தனது கிளைகளை உலகின் பல நாடுகளில் வைத்து வெற்றிகரமான செல்வந்தராக இருக்கிறார்.
இந்நிலையில் தனது நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக இலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
Also Read : https://itamiltv.com/leopard-movement-near-ariyalur/
இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம் . மேலும் இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து முக்கிய நபர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 2-3 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை எலான் மஸ்க் அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் (elan musk) சேவைகளை தொடங்குவதற்கான திட்டங்கள் பற்றி பேசப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.