உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழும் எலான் மஸ்கின் தற்போது உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க் . டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும், ‛எக்ஸ்’ வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க், தனது கிளைகளை உலகின் பல நாடுகளில் வைத்து வெற்றிகரமான செல்வந்தராக இருக்கிறார்.
ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விண்வெளியை ஆராயவும் அதன் மூலம் பூமிக்கு எந்தமாதிரியான வளங்கள் கிடைக்கும் என்றும் தனது space x நிறுவனத்தின் மூலம் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய நபர் என்ற புதிய சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றபின் டெஸ்லாவின் பங்குகள் 65% அதிகரித்தும் அவரின் வேறு சில தொழில் முதலீடுகளும் ஏறுமுகத்தில் உள்ளதாக மஸ்க்கின் சொத்து மதிப்பு மென்மேலும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.