காவல்துறையினர் உடனடி அபராதம் விதிக்கப்படும்போதும் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலரை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வரும் 13ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனத்தை பறிமுதல் செய்யவும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என, ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தற்போது உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும், 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.