ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாத்த அண்ணாத்த, சாரல் காற்றே’ ஆகிய இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் விரைவில் டீஸர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் என்று ‘அண்ணாத்த’ படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காகப் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.