காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ள நிலையில் அவர் குறித்து சில நினைக்கூறும் சில தகவல்களை காணலாம்..
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
1948 பிறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறு வயதில் இருந்தே பொது சேவை மற்றும் பொதுநலத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது . இதையடுத்து சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.
1984ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்
2004 மக்களவை தேர்தலில் கோபி., தொகுதியில் வென்று, 2009 வரை மத்திய இணையமைச்சராக செயலாற்றினார்
2000-02, 2014 – 16 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார்.
அன்பு மகன் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்
இந்நிலையில் உடல்நலக் குறைவால் நவ.11ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்ட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .
தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா 2023ம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவால் அத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.