ஈரோடு இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி (EVKS Elangovan wins).. வாக்கு எண்ணிக்கை நிறைவு…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,09,959 வாக்குகள் பெற்று, 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (EVKS Elangovan wins) பெற்றார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரை விட 66,406 வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
மற்றும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8,474 வாக்குகளும்,
தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,177 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மேலும், இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை ஒரு வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.
இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
இதனையடுத்து, 15ஆவது மற்றும் இறுதிச் சுற்றுடன், ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.