வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, நமது ஐ தமிழ் நியூஸ் நேர்காணலில் பாமக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை ஒருமையில் கடுமையாக விமர்சித்து பேசினார்.
நமது நேர்காணலில் சி.என்.ராமமூர்த்தி கொடுத்த பேட்டியின் சுருக்கம் இதோ:
நெறியாளர் கேள்வி: பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளார் இதை எப்படி பாக்குறீங்க?
சி.என்.ராமமூர்த்தி பதில்: கழுத தேய்ந்து கட்டெறும்பான கதையா கட்சியே ஒன்னுமில்ல.. இல்லாத கட்சிக்கு, புதிய மொந்த பழைய கல்லு.. லேபில் ஒட்டி அனுப்புறாங்க! இதுல என்ன இருக்கு.. ஏற்கனவே 2016 தேர்தல்ல மாற்றம் முன்னேற்றம் அன்புமணின்னு பிரச்சாரம் பண்ணாங்க.. ஒரு இடத்துல கூட டெபாசிட் வாங்கலயே! அந்த கட்சியே காணாமல் போச்சு! முதல்ல அன்புமணிய தலைவராக்குனதே தவறு.. இந்திய Constitution-ல என்ன சொல்லிருக்காங்க.. இது Secular Country ன்னு சொல்லிருக்காங்க.. அத மாத்தமுடியுமா?
அதே மாதிரிதான் பாமக தேர்தல் ஆணையத்துல பதிவு செய்யும்போது சொல்லி பதிவு பன்னிருக்காங்க… நானோ தனது மகனோ கட்சியின் பதவிக்கு வரமாட்டோம்ன்னு சொன்னாங்க! அப்டி சொல்லிட்டு அன்புமணிய தலைவராக கொண்டு வந்திருப்பது தவறு.. பாமக-வ பாசமான மகன் கட்சி, பணத்துக்கான கட்சின்னு சொல்றாங்க! கடந்த உள்ளாட்சி தேர்தல்ல 12,868 இடத்துல போட்டியிட்டு வாங்குன ஓட்டு சதவீதம் வெறும் 0.9% தான்.. இவங்க நோட்டாவோட போட்டிபோடுறாங்க! ஆனா 3-வது பெரிய கட்சின்னு சும்மா சொல்லுவாங்க!
நெறியாளர் கேள்வி: 2016-ஐ போன்று மீண்டும் 2026 தேர்தலுக்காக பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என முழக்கத்த கையில எடுத்துருக்காங்க? பாமக 2016 போல நிலைபாடு கையில எடுத்தால் 2026 தேர்தலில் சோபிக்க முடியுமா?
பதில்: உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு சார்… ஏற்கனவே பாண்டிச்சேரிய உதாரணமா எடுத்துக்கலாம்.. 70% வன்னியர்கள் வாழும் இடம்..
2011-ல அதிமுகவுடன் கூட்டணி வச்சாங்க.. அதுல அதிமுக-வுக்கு 15 சீட் பாமக-வுக்கு 15.. இதுல ஒரு இடத்துல கூட வெற்றி பெற முடியல… 2021-ல ஒருத்தர்கூட பாமக சார்பில வேட்புமனு தாக்கல் பண்ணலயே.. அப்போ கட்சி அங்க இருக்குதா..? அதே நிலைம தான் தமிழ்நாட்டுலையும்.. தமிழ்நாட்டுல அதிமுக கூட்டணில இருந்தனால அதிமுக-வோட வாக்குகள தான் வாங்கி ஜெயிச்சாங்க! கட்சி முடிஞ்சி போச்சு!
முழு நேர்காணலை காண: