வேலூர் மாவட்டத்தில் இரவு நேரக் குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும்வாகனங்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாவட்ட டிஐஜி எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலில் இரவு நேரக்குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூரில் இரவு நேரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டு மொத்த ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி செய்வதால், இரவு நேர ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நள்ளிரவில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் மருத்துவரையும் அவரது ஆண் நண்பரையும் நள்ளிரவில் ஷேர் ஆட்டோ எனக் கூறி கடத்திச் சென்று பெண் மருத்தவரை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இரவு நேரக் குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.