பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் மாரடைப்பால் காலமானார்!

famous-astrologer-nellai-vasanthan-died-today
famous astrologer nellai vasanthan died today

தமிழ் நாட்டின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன். நெல்லை மாவட்டத்தில் இருந்த வசந்தன் ஜோதிடராக அறியப்பட்டு வரும் நிலையில் அவர் நெல்லை வசந்தன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோதிடம் குறித்து பேசி வந்த இவர், புத்தாண்டு கணிப்புகளையும் கணித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வின் போதும் இவரது கணிப்புகளைக் கூறியது துல்லியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். ஜோதிட கணிப்புகளால் பிரபலமான இவரின் இழப்பு ஜோதிட உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

famous-astrologer-nellai-vasanthan-died-today
famous astrologer nellai vasanthan died today

அண்மையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குறித்து நெல்லை வசந்தன் கணித்திருந்தார். ஜோதிடம், ஆன்மிகம் என இரண்டிலும் பெரும் பங்காற்றிய இவர், அதுசார்ந்த பல நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். இதனால் மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்ற இவரின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts