2021-ல் விவாகரத்து செய்து கொண்ட பிரபலங்கள்..!

Spread the love

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் திருமணம் செய்வதும் பிறகு ஏதாவதொரு காரணத்திற்காக விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் இந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து அறிவிப்பின் மூலம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்..

சமந்தா – நாக சைதன்யா:

சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் கதை வித்தியாசமானது. இருவரும் “யே மாய சேசவே” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். அவர்களது நட்பு காதலாக மாறியது. 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சமந்தா – நாகசைத்தான்யா

பின் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ரசிகர்கள். சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரிந்ததை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரிந்தனர்.

‘வாயை மூடி பேசவும்’, மாரி, மாரி 2 போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி மோகன். 2012ம் ஆண்டு தனது பள்ளி காலத்தில் இருந்து வந்த நீண்ட நாள் தோழியான அருணாவை திருமணம் செய்து கொண்டார்.

பாலாஜி மோகன் – அருணா

திருமணத்தின் அடிப்படையில் அவர்களது நட்பு பலனளிக்கவில்லை. அதன் பின் ஒரு வருடம் கழித்து அருணாவை விவாகரத்து செய்வதாக பாலாஜி மோகன் அறிவித்தார்.

டி-இமான் – மோனிகா ரிச்சர்டு:

சூப்பர் ஹிட் காதல் பாடல்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி இமான். இவர் தற்போது தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டிடமிருந்து விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

டி-இமான் – மோனிகா ரிச்சர்டு

13 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் டி இமானும், மோனிகாவும் இருவர் சம்மதத்துடன் விவாகரத்தை முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் பிளெசிகா கேத்தி மற்றும் வெரோனிக்கா டோரதி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சுஷ்மிதா சென் – ரோஹ்மன் ஷால்:

சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது காதலர் ரோஹ்மன் ஷாலை பிரிந்ததாக அறிவித்தார். இருவரும் மனதாரவே பிரிந்தனர். இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில்,” நாங்கள் நண்பர்களாக தொடங்கினோம்” நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்! ஆனால் காதல் அப்படியே இருக்கிறது. காதலில் விழுவது அழகானது. ஆனால் ஒரு சில சமயங்களில் தனித்தனி பாதையில் செல்ல வேண்டியிருக்கும்.

சுஷ்மிதா சென் – ரோஹ்மன் ஷால்

 


Spread the love
Related Posts