ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த தென்கொரிய நடிகர் லீ சன்-கியூன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் மிக பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது பெற்ற சூப்பர் ஹிட் படமான ‘பாராசைட்’ என்ற தென்கொரியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகர் லீ சன்-கியூன்.
இதையடுத்து தென்கொரியாவின் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் லீ சன்-கியூன்.கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் உள்ள பூங்கா அருகே இருந்த காரில் நடிகர் லீ சன்-கியூன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தற்போது நடிகர் லீ சன்-கியூன் மரணம் தொடர்பாக தென்கொரியா நாட்டின் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.