திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் 4ம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், எந்த ஆடையை வாங்கும் முதல் 400 பேருக்கு ஒரு ஆடை ரூ.4க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கடை முன் திரண்டனர். இதனால் கடை அமைந்துள்ள ருக்மணிப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“இலவசமாக” ஒரு பொருள் கிடைக்கிறது என்றாலே அதற்கு அவ்வளவாக மதிப்பு இருப்பதில்லை..ஆனால், நம் மக்கள் எந்த இலவசங்களையும் விட்டுவைப்பதில்லை.. ஓசியில் ஒரு பொருள் கிடைத்தால், சில சமயம் அதற்காக உயிரைக்கூடப் பணயம் வைக்கத் துணிந்துவிடுகிறார்கள்.
மக்களின் இந்த பலவீனத்தைத்தான், வியாபாரிகள் காசாக்கிக் கொள்கிறார்கள்.. இலவசம் என்று சொல்லாமல் “ஆஃபர்” என்ற கவுரவ பெயரையும் அதற்குச் சூட்டுகிறார்கள்.. எந்த ஒரு பெட்டிக்கடை வியாபாரியும், லாபம் இல்லாமல் எந்த இலவசத்தையும் தர முன்வர மாட்டார்கள் என்பதுகூட தெரியாமல், நம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவது சில சமயங்களில் வியப்பையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஆஃபர் என்ற பெயரில், செல்லாத 5 பைசாவுக்குப் பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய் ஃப்ரீ, எனக் கவர்ச்சி விளம்பரங்கள் செய்து தங்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் 4ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் முதலில் வரும் 400 நபர்களுக்கு எந்த டிரஸ் எடுத்தாலும், ஒரு டிரஸ் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த பொதுமக்களும், காலை 8 மணியிலிருந்து அந்த கடைக்கு முன்பு குவிய ஆரம்பித்துவிட்டனர்.. இதனால் அந்த கடை அமைந்துள்ள, ருக்மணிபாளையம் ரோட்டில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. கடைக்குள்ளும் கூட்டம், கடைக்கு வெளியிலும் கூட்டம் அலைமோதியது…
அதற்கேற்றாற்போல, கடையிலும் உடைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.. அதையெல்லாம் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து, வாங்கிக் கொண்டிருந்தனர்.. அந்த சைக்கிள் கோப்பில் கூட்டத்தினுள் நுழைந்த மர்மநபர்கள் ஆர்வத்துடன் டிரஸ் வாங்கப் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த சிலரிடம், தங்களது கைவரிசையைக் காட்டி அவர்களின் செல்போன்கள், பர்ஸ்களை பிக்பாக்கெட் அடித்த சம்பவம் நடந்துள்ளது..
பணத்தை காணோம் என்று ஆங்காங்கே அலறல்கள் வெடித்தன.. 4 ரூபாய்க்கு டிரஸ் வாங்க ஆசைப்பட்டு, தங்களின் விலை உயர்ந்த தொலைப்பேசி, பணம், பர்ஸ் போன்றவற்றை இழந்த பொதுமக்கள் கண்ணீருடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்..