கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை வைத்து விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார்.
கேரளாவின் சின்னக்கனல் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை மக்களை அச்சுறுத்தி 8 பேரை கொன்றது. கடந்த மாதம் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மீண்டும் அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிக்கொம்பன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது.
கிட்டதட்ட ஒரு வாரகாலம் இந்த அரிக்கொம்பன்யானை ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மேலும் பிடிக்கபட்ட அறிக்கொம்பனுக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வனத்துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்தனர். பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் கொண்டு விடப்பட்டது.
இந்நிலையில் அரிக்கொம்பன் யானைக்கு ஒரு விவசாயி ஒருவர் 8 அடி உயர சிலை வைத்து அசத்தியுள்ளார்.கேரளாவின் புன்னயார் பகுதியை சேர்ந்த கோகோ விவசாயான பாபு. இவர் அரிக்கொம்பன் யானைக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து சிலை வைத்துள்ளார்.
இந்த அறிக்கொம்பன் யானையை வடிவமைத்த உதவியவர் மளயில் பினு.இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு சின்ன வயதில் இருந்தே காட்டு யானைகள் மீது தீவிர ஆர்வம் உண்டு.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இஞ்சி விவசாயம் செய்த போது அரிக்கொம்பன் யானை வயல்களில் புகுந்து சேதப்படுத்தியதுஎனக்கு பிடித்தமான யானைக்கு சிலை எழுப்ப வேண்டும் என நீண்டகால ஆசை. அதை இப்போது செய்துவிட்டேன்” நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.