Delhi Farmers Protest | எல்லையில் உள்ள போர் வீரர்களை போன்று விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் :
டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓராண்டுக்கும் மேல் இந்த போராட்டம் நீடித்த நிலையில், மத்திய அரசு வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு
வரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், மத்திய அரசு வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி,
மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.இந்த சூழலில் ,விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு,
இதையும் படிங்க: Farmers Protest Delhi | ”நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..”-கனிமொழி தாக்கு!
திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வாகன டயர்களை பழுதுப்படுத்தும் வகையில் தரையில் ராட்சத ஆணிகள் அடித்து வைக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி பேச்சு:
இந்த நிலையில்,எல்லையில் உள்ள போர் வீரர்களை போன்று விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758354721956348347?s=20
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், எல்லையில் போர் வீரர்களைப்போல நாட்டுக்காக போராடுகின்றனர்.
நாட்டு நலனுக்காக விவசாயிகள் போராட்டம் (Delhi Farmers Protest) நடத்துவது, போர் வீரர்களின் தியாகத்துக்கு இணையானது.
ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் மணிப்பூர் மாநிலத்தை பற்றி எரியச் செய்த இனக் கலவரத்தை ஏற்படுத்தின.
பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி தலைமையிலான அரசு,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாத திட்டத்தின் செலவை ரூ.70,000 கோடி குறைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஏழை மக்கள் இடம் பெறவில்லை. பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொண்டனர் என்று ராகுல் காந்தி பேசினார்.