கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த சிறுமி உரிய மருத்துவ சிகிச்சை இல்லாமல் உயிரிழந்த நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் இமாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த அப்துல் சதாரின் மகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்காமல், சிறுமியின் தந்தை அவரை குஞ்சிப்பள்ளியில் உள்ள மசூதியின் இமாம் உவைஸ்ஸிடம் அழைத்து சென்றுள்ளார்.
அந்த இமாம் சிறுமிக்கு புனித நீரை தெளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டாம் குணமாகிவிடுவார் என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தந்தையின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் இமாமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே இதுபோல மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சிறுமியின் தந்தை அப்துல் சதாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.