முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா? பாஜக நிர்வாகி என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
இதையும் படிங்க : ஆரஞ்சு அலெர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
“கொல்கத்தாவில் 31 வயதாகும் பெண் பயிச்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி?. மேற்குவங்காள விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாய் திறக்கவில்லை;
ராகுல் காந்தி ஏன் பேசாமல் இருக்கிறார்?; பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்?. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.