வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது .
புயலாக வலுப்பெற்றதால் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த ஃபெங்கல் புயலானது மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயலின் நகரும் வேகம் மணிக்கு மணிக்கு அதிகரித்து வருவதாகவும் தற்போது மணிக்கு 10 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
நாகையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயலானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.