FIFA உலகக் கோப்பை 2026 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. FIFA உலகக் கோப்பை தொடரின், இறுதிப் போட்டி நியூயார்க் அரங்கத்தில் நடைபெறவுள்ளது
நேற்று (பிப்ரவரி 4) வெளியிடப்பட்ட இந்த அட்டவணையில், போட்டித் தேதிகள் மற்றும் குழு நிலைகள் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் – 32 வது சுற்று, 16 வது சுற்று, காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிபோட்டி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள, FIFA உலகக் கோப்பை தொடர் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் 42 அணிகள் பங்கேற்க உள்ளன.
FIFA உலகக் கோப்பை 2026 நடைபெறும் இடங்கள்
மெக்ஸிகோ : எஸ்டாடியோ அஸ்டெகா (மெக்சிகோ சிட்டி), எஸ்டாடியோ பிபிவிஏ (குடலுபே), எஸ்டாடியோ அக்ரோன் (ஜபோபன்).
கனடா : BC இடம் (வான்கூவர்), BMO ஃபீல்ட் (டொராண்டோ).
அமெரிக்கா : மெட்லைஃப் ஸ்டேடியம் (நியூயார்க்/நியூ ஜெர்சி), ஏடி&டி ஸ்டேடியம் (டல்லாஸ்), அரோஹெட் ஸ்டேடியம் (கன்சாஸ் சிட்டி), என்ஆர்ஜி ஸ்டேடியம் (ஹூஸ்டன்), மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியம் (அட்லாண்டா),
சோஃபி ஸ்டேடியம் (இங்கிள்வுட்), லிங்கன் பைனான்சியல் ஃபீல்டியா ), லுமென் ஃபீல்ட் (சியாட்டில்), லெவிஸ் ஸ்டேடியம் (சாண்டா கிளாரா), ஜில்லட் ஸ்டேடியம் (ஃபாக்ஸ்பரோ), ஹார்ட் ராக் ஸ்டேடியம் (மியாமி).
போட்டியை நடத்தும் மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா மூன்று குழுநிலை ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாடும்.
https://x.com/ITamilTVNews/status/1753738547419550117?s=20
108 போட்டிகள் கொண்ட இந்த FIFA உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெறவுள்ளது.
காலியிறுதி ஆட்டங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், கனஸ் சிட்டி, மியாமி, போஸ்டன் ஆகிய நகரங்களிலும், அரையிறுதிப் போட்டிகள் டல்லஸ், அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
FIFA உலகக் கோப்பை தொடரின், இறுதிப் போட்டி நியூயார்க்கில் உள்ள மெட்லைஃப் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி 2026 ஜூலை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள ஐகானிக் எஸ்டாடியோ அஸ்டெகாவில் மெக்சிகோ தேசிய அணியுடன் போட்டி தொடங்கும்.
நியூயார்க் நகரத்தில் இருந்து, 5 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில், 82,500 பார்வையாளர்கள் வரை அமர்ந்து பார்க்க முடியும்.
இதையும் படிங்க : காவிரி நீரை முழுமையாகப் பெற முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக – இபிஎஸ் கண்டனம்!
அதே போல் FIFA உலகக் கோப்பை தொடருக்கான முதல் போட்டி, நடைபெறவுள்ள மெக்சிகோ சிட்டி மைதானத்தில் சுமார் 83,000 பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டியை பார்க்கலாம்.
The 2026 FIFA World Cup schedule
இந்த மைதானத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டில், FIFA உலகக் கோப்பையின் முதல் போட்டி நடைபெற்றது. அதே போல் 1986ஆம் ஆண்டில், இறுதிப்போட்டி நடைபெற்றது.
FIFA உலகக் கோப்பை 2026 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பைனல் போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை, சீரமைக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன.