உத்தரப்பிரதேசம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 10.45 மணியளவில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகள் வார்டில் ஆக்சிஜன் அதிக அளவில் இருந்ததால் வேகமாக பரவிய தீயினால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவலறிந்து தீயணைப்புத்துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : November 16 Gold Rate : இன்றும் குறைந்தது தங்கம் விலை!
விபத்தில் சிக்கிய 54 குழந்தைகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
எஞ்சிய குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த கோர சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள அவர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜான்சி மாவட்ட காவல்துறை ஆணையருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.