விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்பாராதவிதமாக நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு (Udhayanidhi Fund) தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார் .
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் நேற்று (17.01.24) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் பட்டாசு ஆலையில் உள்ள அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த அறை முழுவதும் தீ பிடித்து இடிந்து விழுந்தது. , தீப்பொறி மற்ற அறைகளுக்கும் செல்ல பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் அருகில் இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இந்த வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் (Udhayanidhi Fund) குடும்பத்தை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக நேற்று நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது.
இந்த கோர விபத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், அவர்களுக்கு துணை நிற்கும் விதமாக
தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த நிவாரண உதவிக்கான காசோலைகளை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கி ஆறுதல் கூறினோம்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சையும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது கழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துளளார்.