ஆல்ஃபபெட்டில் உங்கள் பெயரின் முதல் எழுத்து A TO L வரை இருக்கா..? உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நியூமராலஜி அடிப்படையில் ஒருவருடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து அவரின் குணம் எப்படி, அவரின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் உங்கள் பெயரின் முதல் எழுத்து அடிப்படையில் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். A முதல் L வரை…

A என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்களுக்கு ரொமான்டிக்கல் அதிக ஆர்வம் இருக்காது. மேலும், காதலிலும் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் காதல் உங்களுக்கு கிடைக்கும். ஆனாலும், அதில் முழு மனதுடன் ஈடுபட உங்களுக்கு பொறுமை இருக்காது. காதலில் அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாத நீங்கள், உங்கள் துணியை கவர வெளித்தோற்றத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பீர்கள்.

B என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

அடிப்படையில் நீங்கள் ஒரு சோம்பேறியாக இருப்பீர்கள். உங்கள் என்ன முழுவதும் சிற்றின்பத்திலேயே அதிக ஆர்வம் உடையதாக இருக்கும். காதல், போதை, உணவு போன்றவற்றை அனுபவிப்பதில் மட்டுமே உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் துணையிடம் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதலில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அன்பை வெளிப்படுத்துவதில் தனித்துவம் காட்டக்கூடியவர்களாக இருந்தாலும், உடல் சார்ந்த விஷயங்களை தவிர்த்து இன்னும் உங்களை காதல் வாழ்க்கைக்காக மெருகேட்றிக்கொள்ள வேண்டும்.

C என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

பொதுவாகவே உங்களுக்கு உங்கள் துணையை நண்பராக பார்க்கும் பெருந்தன்மையான மனப்போக்கு உள்ளது. உங்கள் துணையுடன் உடலுறவைத் தாண்டி தாண்டி நிறைய விஷயங்களை பேச முயற்சி செய்தால் உங்கள் காதல் வாழ்க்கை இன்னும் அழகானதாக மாறிவிடும்.

D என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவீர்கள். உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துவீர்கள். ஆனாலும், உங்கள் கருத்தை அவர்கள் எதிர்த்தால் நீங்கள் வேறு மாதிரி மாறி விடுவீர்கள். அடிப்படையில் அதிக ரொமான்டிக்காக, நேர்மையாக, பாசமாக இருப்பீர்கள்.

E என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

பிறரிடம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருப்பீர்கள். உடலுறவில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டீர்கள். நீங்கள் பேசும் போது குறுக்கே யாராவது பேசினால் உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும், அது ஒரு நல்ல விவாதமாக இருந்தால் அதனை விரும்பக் கூடியவர்கள் நீங்கள். இருந்தாலும், உங்கள் பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

F என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்கள் துணையை உள்ளங்கையில் வைத்து தாங்கக் கூடிய நீங்கள் மிகச் சிறந்த துணையை தெடிக் கண்டுபிடிப்பதில் வல்லவர். அடிப்படையில் உங்களுக்கு ஊர் சுற்ற பிடிக்கும். ஒருமுறை முடிவு செய்து விட்டால், உங்கள் பேச்சை நீங்களே கேட்க மாடீர்கள். ஆடம்பரமாக, துணிச்சலாக இருக்கும் நீங்கள் வெறும் பொழுதுபோக்கு என காதலை நினைக்காமல் மனதார காதலிப்பவர். உங்கள் வாழ்க்கைத்துணை மிகவும் கொடுத்து வைத்தவர்.

G என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்கள் காதல் துணைக்கு நீங்கள் உண்மையாக இருப்பது போல் உங்கள் துணையிடமும் அதே உண்மையையும், முழுமையையும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிப்பதை போலவே உங்களையும் அவர் காதலிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் யாரிடம், எதை, எப்படி பேசி காரியத்தை சாதித்து கொள்வது என்ற வித்தையும் தெரிந்த சகலகலா வல்லவர் நீங்கள்.

H என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

உங்களுக்கு உண்மையாகயும், உங்கள் பெயரையும், பெருமையையும் காப்பாற்றும் ஒரு நேர்மையான துணையை தேடுபவர்கள் நீங்கள். மேலும், உங்களுக்கான துணை பற்றிய ஒரு உறுதியான, நம்பிக்கையான முடிவுக்கு வந்த பிறகே அவரிடம் நெருக்கம் காட்டுவீர்கள். வெளியில் சென்றால் செலவாகிவிடும் எல்லாவற்றிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் நீங்கள் உடலுறவில் மட்டும் மிக கவனமாக இருப்பீர்கள்.

I என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

மிகவும் ஆடம்பரத்தை விரும்புபவர்களாக இருப்பீர்கள். உங்கள் துணையிடம் அதிக காதலை வெளிப்படுத்தி, அதிகம் அவரை நேசிக்க வேண்டும் என விரும்புவீர்கள். உடலுறவை அதிகம் விரும்பும் நீங்கள் உங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மிகவும் பிடிவாதமாக இருப்பீர்கள்.

J என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

நீங்கள் காதலிலும் சரி, செக்ஸிலும் சரி த்ரில்லிங்கை அதிகம் எதிர்பார்ப்பவர்ககளாக இருப்பீர்கள். காதலை இதய ரீதியிலான உணர்வுகளோடு அணுக வேண்டும். உங்களின் லட்சியத்திலும், குறிக்கோளிலும் நம்பிக்கை வைக்கும் நீங்கள் அன்பிலும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

K என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

பொதுவாக ரகசியமான நீங்கள் உடலுறவில் அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் எந்த விஷயத்திலும் என்ன லாபம், ஆதாயம் கிடைக்கும் என கணக்கு போட்டு களத்தில் இறங்குபவர்கள்.ஆனால் எத்தனை தந்திரசாலியாக நீங்கள் இருந்தாலும் காதலை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தீவிரமாக இருக்க முயல வேண்டும்.

L என்ற எழுத்தில் பெயர் இருந்தால் :

மிகவும் கவர்ச்சியான உடல்வாகு கொண்ட நீங்கள் உங்களுக்கு சரியான துணையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களுக்கு பிடித்த நபரிடம் அன்பை வெளிப்படுத்துவதில் தாராளம் காட்டுவீர்கள். அன்பு, அறிவு, அரவணைப்பு என அனைத்தையும் காட்டி உங்கள் உறவை தக்க வைத்துக் கொள்ள கடினமாக போராடக் கூடியவர்கள் நீங்கள்.

Total
0
Shares
Related Posts