இலங்கை சிறையில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்களையும் (TNCM Request) மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் அவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் .
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கைதுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்களை அநியாயமாகப் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று முத்திரை குத்துவது, அவர்களை நீண்ட காலம் சிறையில் வைக்க வழிவகுத்தது.
இந்நிலையானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி, அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டு இருப்பதால் , அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்து
நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம்,
ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, (TNCM Request) பெருமைமிக்க இந்தியர்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு தொடக்கி இன்னும் முழுசாக 2 மாதம் கூட ஆகாமல் இருக்கும் நிலையில் இலங்கை கடற் படை தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
Also Read :https://itamiltv.com/firecracker-explosion-udhayanidhi-fund/
காலம் காலமாய் இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது கடுமையாக கண்டிக்கதக்கது என பலரும் கருத்து கூறி வந்தாலும் இலங்கை கடற்படை மனமிறங்கி வருவது போல் தெரியவில்லை.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு யாரு தான் எப்போது தான் தீர்வு காணுவார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.