நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக பணக்காரர்களில் ஒருவரான அதானி கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிதீர்த்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலச்சரவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : வேதம் ஓத சாத்தானுக்கு தகுதி உண்டா? வருத்தெடுக்கும் திருச்சி சூர்யா..!!
புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக பணக்காரர்களில் ஒருவரான அதானி கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.