இறந்த உடலுடன் பரிதவித்த அவலம்! – கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தருமாறு கோரிக்கை!

Flood-in-Kritumal-River-The-tragedy-of-carrying-a-corpse
Flood in Kritumal River The tragedy of carrying a corpse

கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, உயிரிழந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் உலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வதான பாலாயி. இவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை உலக்குடி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கிருதுமால் நதியை கடந்து வரவேண்டி உள்ளது.
ஆனால் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தில் வைகை அணை திறப்பு மற்றும் கனமழை காரணமாக கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் இறந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி ஆற்று வெள்ளத்தை கடந்து சடலத்தை கரை சேர்த்தனர்.

Flood-in-Kritumal-River-The-tragedy-of-carrying-a-corpse
Flood in Kritumal River The tragedy of carrying a corpse

இதுபோன்ற மழை காலத்திலும், அணை திறக்கப்படும் சமயத்தில் கிருதுமால் நதியில் வெள்ளம் வரும்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிப்படைகிறது. எனவே தமிழக அரசு கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts