பழனி முருகன் (palani murugan) கோவிலில் தேதி முடிந்த பின் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யபட்ட விவகாரத்தில், நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரசாத கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பழனி முருகன் கோவிலில் காலாவதியான லட்டு, முறுக்கு, அதிரசம் மற்றும் பஞ்சாமிர்தங்கள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் அறங்காவலர் குழுவை சேர்ந்த இருவர் கோவில் பொறுப்பு இணை ஆணையர் பாரதி உள்ளிட்ட கோவில் அதிகாரிகள், பிரசாதம் தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்(palani murugan) ,
இந்த திருக்கோவிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : தலைவர் 171 – சூப்பர் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
இந்த நிலையில் நேற்று காலாவதியான மற்றும் பூசனம் பிடித்த லட்டு , எண்ணெய் சிக்கு வாடை அடித்த முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பக்தர்கள் வாக்குவாதம் செய்து பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.
இந்த நிலையில் தேதி முடிந்த பின் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யபட்ட விவகாரத்தில், நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரசாத கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதோடு ஆய்வக பரிசோதனைக்கு மாதிரி பிரசாதங்களையும் எடுத்துச் சென்றனர்.
இது குறித்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனை அடுத்து இன்று பழனி கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள உறுப்பினர்களான ராஜசேகரன், சுப்பிரமணி, கோவில் இணை ஆணையர் பாரதி,
உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட கோவில் அதிகாரிகள், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்திலும், அதே வளாகத்தில் அமைந்துள்ள லட்டு முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பிரசாத தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடம் வளாகத்தில் உள்ள பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் சென்று பிரசாத பொருட்களில் முறையான பேப்பர்களை பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் பொருட்களை வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி சென்றனர். மேலும் காலாவதி தேதி பதிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து சென்றனர்.