அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு – டிச 20 தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Spread the love

அதிமுக ஆட்சின்போது 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், வருமானத்தைவிட 54 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டின்போது விஜயபாஸ்கரின் வீடு உட்பட சுமார் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தீவிர சோதனை நடத்தி பலகோடி பதிப்பிலான ஆவணங்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் சுமார் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில், லஞ்சஒழிப்புப் போலீஸார் அண்மையில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தாக்கல் செய்த ஆவணங்களின் நகலைக் கேட்டு விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து இருவருக்குமான 17,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்களை, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். அவற்றை விஜயபாஸ்கர் மற்றும் ரம்யா தரப்பு வழக்கறிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து இந்த இருவர் மீதான வழக்கு விசாரணையை வரும் 20-ம்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.


Spread the love
Related Posts