பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவுறுத்தல்

Spread the love

தமிழகத்தில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கும் எனபதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், சென்னைக்கு 290 கி.மீ தொலைவில் கிழக்கு, தென்கிழக்கில் தற்போது மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறியதாவது :

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிக்ஜாம்’ புயலாக மாறியது.

இன்று மாலை முதல் நாளை மாலை வரை காற்று மழை இருக்கும், இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும்.

சென்னையில் 162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது . மழையோடு காற்றும் இருக்கும் அரசு என்ன தான் செயல்பட்டாலும் பொதுமக்களும் உடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முப்பது கப்பல்களுடன் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் தயார் உள்ளார் .

மிக்ஜாம் புயலை ஒட்டி இரவு நேரத்திலும் கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts