தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

former-chief-minister-karunanidhi-aide-shanmuganathan-has-passed-away
former chief minister karunanidhi aide shanmuganathanhas passed away

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற உடன், தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த சண்முகநாதனை தனது உதவியாளராக நியமித்து கொண்டார். கலைஞரின் நிழல் என்று திமுகவினரால் அழைக்கப்பட்ட அவர் கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் உதவியாளராகவே இருந்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்கு தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கூறும்போது, ” கலைஞர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் சண்முகநாதன் என்றும் அவரின் மறைவு தலையில் இடிவிழுந்தது போன்ற துயரத்தை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

former-chief-minister-karunanidhi-aide-shanmuganathan-has-passed-away
former chief minister karunanidhi aide shanmuganathanhas passed away

மேலும் இவரது மறைவிற்கு கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சண்முகநாதன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு. கழக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சண்முகநாதனின் மறைவுக்கு தி.முக மூத்த தலைவர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts