மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதலமைச்சர் இன்று தெடங்கி வைத்தார்.

puducherry-cm-distribute-rain-relief-fund-rs-5000
puducherry-cm-distribute-rain-relief-fund-rs-5000

புதுச்சேரியில் மழை நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியது.

மேலும் புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது.

இதனை அடுத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மழை நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அதன்படி மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாயும் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா 20,000 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

puducherry cm distribute rain relief fund rs 5000

அதன்படி, குடும்ப அட்டைதார்களுக்கு மழை நிவாரணம் வழங்கும் பணியை சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரகளை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள், அரசு நிறுவனமான அமுதசுரபி மூலம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் எனக் கூறினார்.

Total
0
Shares
Related Posts