Arcot Veerasamy-திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமானஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரான ஆற்காடு வீராசாமி வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
92 வயதாகும் அவர் தனது வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் தோள்பட்டை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து ஆற்காடு வீராசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க :http://Vaiko-”ஒரே நாடு ஒரே தேர்தல்..”நடைமுறைக்கு சாத்தியமில்லை!
அரசியல் வாழ்க்கை:
கடந்த 1970களின் பிற்பகுதியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, மிசா சட்டத்தின் கீழ் திமுக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் ஸ்டாலின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது, ஆற்காடு வீராசாமிதான் அவரை காப்பாற்றியுள்ளார்.
ஸ்டாலினை காப்பாற்ற முயன்றபோது, சிறை அதிகாரிகள் தாக்கியதால் ஆற்காடு வீராசாமிக்கு காது கேட்காமல் போனது.
இந்த சம்பவத்தை, தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலினே பல முறை நினைவு கூர்ந்துள்ளார்.
திமுகவின் பொருளாளராகவும், மின்சாரத்துறை அமைச்சராகவும் இருந்த ஆற்காடு வீராசாமி 2007ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது கடுமையான மின் வெட்டு பிரச்னை ஏற்பட்டது.
அப்போது பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
https://x.com/ITamilTVNews/status/1748313105044824164?s=20
முதல்வர் சந்திப்பு:
கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்து வரும் நிலையில், உடல் நல பாதிப்படைந்திருப்பதால் வீட்டிலேயே மருத்துவமனை போல் பெட் அமைத்து ஓய்வில் இருந்து வந்துள்ளார்.
அவரை திமுகவின் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் சந்தித்து வந்தனர்.சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்காடு வீராசாமியை(Arcot Veerasamy) சந்தித்து நலம் விசாரித்தார்.