மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிந்தார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற ஷின்சோ அபே, கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான நாராவில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கீழே விழுந்தார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த ஷின்சோ அபே-வை மீட்ட போலீசார், ஆம்புலன் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்த செய்தி ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க நபரை உடனடியாக ஷின்சோ அபேவின் பாதுகாப்பு அதிகாரிகள் துரத்தி பிடித்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.