அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் (donald trump arrested).
முன்னதாக, 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
மேலும், ஆபாச பட நடிகை ஒருவர், அவர் வெளியிட்ட புத்தகத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடனனான உறவு குறித்து பதிவு செய்திருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்டு ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டு வெளியான நிலையில், இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வந்தார். ஆகையால், அதன் தாக்கம் ஜனாதிபதி தேர்தலில் அதிகமாக எதிரொலித்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழ்நிலையில், ஆபாசபட நடிகையுடனான தொடர்பு வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல், 1,30,000 அமெரிக்க டாலர்களை ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் தடுக்க டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக, முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனதை அடுத்து அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார்.
அப்போது, கைகளில் விலங்கு பூட்டப்படாமல், டிரம்பிடம் கைரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது (donald trump arrested) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.